| நீ என்னில் இருந்த இடம் இன்று வெற்றிடமாய்... தொலைந்தது என் கனவுகள் மட்டுமே.... நினைவுகள் அல்ல... அவை இன்னும் உயிரோடு உறவாடி கொண்டு தான் இருக்கிறது... நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள் இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்.... | ![]() |
Labels
- ஒரு தலை காதல் (8)
- காதல் (9)
- காதல் தோல்வி (7)
Recent Post
Recent Comments
Followers
காதல் கவிதைகள்
ஒருதலை காதல்... காவியங்களின் மறு பெயர் காமத்தின் முகத்திரை கற்பனை உலகத்தின் திறவுகோல் கவிஞனின் முதல் வரிகள்...! ஒருதலை காதலன் உருவமில்லாத ஓவியம் வரைந்து உருவம் பற்றி வரையறுப்பான் ... கண்களை திறந்து கொண்டே கனவுகளுக்காக காத்திருப்பன்... அவளை அறிந்தவர்கள் முன் உத்தமனாக உருமாறுவான்... ஒருவரி திருக்குறள் படித்து ஓராயிரம் பொருள் சொல்வான்... வசை சொற்களை கூட வாழ்துக்களாக்கி வாசிப்பான்... உயிரின் உருவத்தை உலகிற்கே சொல்வான்... பொய்யான கற்களை கொண்டு உண்மைக்கு கோயில் கட்டி கற்பனையை கடவுளாக்கி மணல் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பான் ...! | ![]() |
| அவள் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளை பொறுக்கினேன் ... அவள் தலைகள் உதிர்த்த மயிர்களை பொறுக்கினேன்... அவள் கைகள் தொட்ட அனைத்தையும் பொறுக்கினேன்... இறுதியில் அவளே சொன்னாள் போடா பொருக்கி என்று ...! | ![]() |
| உன் உதட்டு வரிகளை என்ன ஆரம்பித்து முடித்திருந்தால் இன்னொரு இராமானுஜன் உருவாகிருப்பான்...! உன் உதட்டு வரிகளை என்ன ஆரம்பித்திருந்தால் இன்னொரு கண்ணதாசன் உருவாகிருப்பான்...! | ![]() |
| "பூவுக்குள் பூகம்பம்" என வாசித்த பொது என்ன உவமை இது என்று எள்ளி நகையாடியிருகிறேன் ஆனால் அந்த வரிகளுக்கு உயிரூட்டியவள் நீ ... உன் பார்வையை நேருக்கு நேராய் சிந்தித்த போதுதான் சித்தரிக்க பட்டிருக்க வேண்டும் இந்த வரிகள்... அல்லது ஏதோ ஒரு தமிழ் புலவன் உன்னை கண்டு துறவறத்தை துறவுபூண்டபோது அவன் எழுதிய வரிகளாயிருக்கலாம் இந்த வரிகள்...! | ![]() |
| முன்னொரு நாள்... அந்தி பொழுதில் அவளும் நானும் தனியே வலம் வருகையில் அவள் ஒற்றை கை விரல்கள் என் விரல்களை இறுக்கி அணைத்தபோது விறைத்து போனது என் ஆண்மையாக இருந்தாலும் வியர்த்து போனது என் இதயம்.... பின்னொரு நாள்... அவள் தந்தைக்கு துரோகம் இழைக்க மனமில்லை என்றும் கடவுள் வழி நடப்போம் என்றும் எங்கள் காதலை தியாகம் செய்யலாம் என்ற போது.... மழலை போன்றவள் ... போன்றவள் என்றெண்ணி என் உணர்வுகளை கொன்று வலியோடு வழியனுப்பினேன்...! இன்று என் கண்ணெதிரிலே இன்னொருவனோடு கைகோர்த்து போகையில் விறைத்து போனது அவள் இதயமாக இருந்தாலும் ... வியர்த்து போனது என் விழிகள்...! | ![]() |
| உன் கைகள் மென்மையானது என்று அன்றே தெரியும்... ஆனால் உன் செருப்பு இத்தனை கடினமானது என்று இன்றுதான் தெரியும்...! | ![]() |
| விபசார விடுதி சென்று அழகிகளின் மார்புகளையும் தேகத்தின் தேக்கங்களையும் பார்த்து பாவைகளை பரிசோதித்து ஒருநாள் கூத்தாட ஒருமிப்பது போல .... இன்றைய காளைகள் காதலை கணக்கு பார்த்து கண்ணிகளை வகைபடுத்தி காதலியை தேர்வு செய்து காமத்தின் பசி தீர்க்க... பணத்திற்கும், வசீகர வார்த்தைகளுக்கு சொக்கி போகும் புத்திகெட்ட மங்கயர்களை காதலை காரியமாக்கி காம கூத்தாடுகின்றனர் ...! | ![]() |
| விழிகளில் வழிந்தோடும் ஏக்கம் புரண்டு படுத்தும் வந்துத் தொலைக்காது தூக்கம்... தடையிட்டு அடைத்தாலும் அனையுடைத்துப் போகும் எண்ணம் எல்லைத் தாண்டும் தருனம். கட்டுப் படுத்தி வைத்திருந்தும் கட்டவிழ்த்துப் போகும் கட்டழகில் தோற்றுவிட்ட சலனம்... திறந்துவிட்ட மடையென ஆசை உள்ளே ஓடும் மறந்துவிட நினைத்தாலும் தினம் விட்டு விட்டு மூடும்... காமம் என்ற சுருதி நயமும் காதலென்ற ராகம் சேரும் காமம் இங்கு கரைந்து குலைந்து காதல் என்று உருவம் மாறும்....! | ![]() |
| இனியவளே... நீ சூடிய மலரில் வண்டுகள் மொய்ப்பதையே தாங்க முடியாதவன் நான்.. நீ இன்னொருவனுக்கு இதயத்தையே கொடுத்து விட்டாயடி .. போதுமடி... என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட நம் சித்திரங்கள் சித்தரிக்கும் நம் சரித்திரத்தை உண்மை அன்பு மதிக்கப்படும் நாள் வரும்-அன்று நீ புரிந்து கொள்வாய் என் காதலை... நம் அன்றைய நட்பை கொண்டாட என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!! உன் வருகைக்காக.... ! | ![]() |
| ரோஜா பறிக்கும் போது முள்ளினால் உருவான காயம் அவள் வாங்க மறுத்த போது தான் வலித்தது..! | ![]() |
| தோல்வியைக் கண்டு அஞ்சியே தோற்றுப்போனேன் மனமிருந்தும் சொல்லாமல் குரலிருந்தும் ஊமையாய் - உண்மையில் நான் தான் ஊனமுற்றவன்!! நீ வரும் பாதையில் உதிர்ந்த பூக்கள் கூட மீண்டும் உயிர் பெற்று செடியில் ஒட்டிக் கொள்கிறது -என் உடைந்த மனத்துண்டுகளை இன்னும் தேடி முடிக்கவில்லை.. படைக்கும் பொழுது உயிரை மனதில் வைத்துவிட்டான் பிரம்மன் அவள் உடைத்து சென்றபின் பிணமாக திரிகிறேன்.. நீ இல்லாத இரவுகள் கூட சுகமாகத்தான் இருக்கிறது நம் பேசாத நாட்களின் நினைவுகளோடு இறந்தாலும் நம் காதலோடு இறப்பேன் மீண்டும் அதற்காகவே பிறப்பேன்... | ![]() |
| நீ எதிலும் தோல்வியடைவதில், துளியும் விருப்பமில்லை எனக்கு... நீ என்னை மறக்க முயற்சிக்கும் எல்லா வழிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஆனால் நீ மறந்தபின், மறக்காமல் சொல்லிக்கொடு... எப்படியெல்லாம் முயற்சித்தாய்? என்னை மறந்திட...! | ![]() |
| சந்தித்தாய் சாய்ந்தாய் சிரித்தாய் .... அழைத்தாய் அன்பு கொடுத்தாய் அலட்சியம் செய்தாய் ... பழகினாய் பரவசமடைந்தாய் பதற செய்தாய்... உதவினாய் உயர்த்தினாய் உதாசினப்படுத்தினாய் .... கண்களால் காதலாய் காயப்படுத்தினாய் ... ராமனாக என்னை நினைதேன் - நீயோ ராவணனை ராமனாக்கி என்னை அனுமனாக்கினாயோ.... தேவடியாளே... உன் தாயின் முலைகள் உனக்கு உணவளித்தாதா இல்லை நஞ்சுட்டியதா இப்படி உருமாருகிறாய்... தயவு செய்து தாய்மை அடையாதே தாயாவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் ...! | ![]() |
| என்மீது உங்களுக்கு எப்போதும் கோபமே வராதா..? என்று ஒரு நாள் திடீரென்று கேட்டாய்.. நான் புன்னைகைத்தபடியே சொன்னேன்"வரும் கொள்ளை கோபம் வரும்... ஒருவேளை நீ என் அன்பெல்லாம் மறந்து விலகி போனால்...வரலாம்..?! ஆனால் அப்போதும் உன்மீதான கோபத்தை.. என்மேல்தான் காட்டிக்கொள்வேனேதவிர.. என் உயிர்மழை உன்மீது அல்ல...' என்றதும் கண்ணீரோடு சாய்ந்துகொண்டாய் உனக்கான என் தோள்களில்... | ![]() |
| அவள் ...... மேகம் போல மென்மையாக நட்பை கடந்திருப்பேன் நீ தென்றலாக அன்பு காட்டியதால் மழையாக கொட்டிவிட்டேன் காதலை ....! நான்.. அடி தோழி-நீ வெட்கப்ப்படும்வரை எனக்கு சத்தியமாய் தெரியாது! நீ என் காதலியானது...! | ![]() |
| உன் அளவான அழகில் அவ்வளவாய் காதல் இல்லை... உன் அழகான சிரிப்பில் தான் அவ்வளவும்... உன் ஒவ்வொரு அசைவுக்கும் கவிதை எழுதி கவிஞனான நான்... உன் வெட்கத்துக்கும் முத்தத்துக்கும் தோற்று போய் காதலன் ஆகிவிட்டேன் ...! | ![]() |
| வாகனங்கள் அவசரமாய் விரைந்து செல்லும்... காற்றில் இருள் மெதுவாக பரவும். தெரு விளக்கு கம்பம்களில் ஒளிப்"பூ" மெல்ல பூக்கும்... மெல்லிய குளிர் காற்று என்னை தீண்டி போகும்... அவசரமாய் உலகம் என்னை சுற்றி இயங்கி கொண்டு இருக்கும்... நான் மட்டும்... பேருந்து நிலைய சுவரில் சாய்ந்து ஒற்றை காலில் தவம் இருப்பேன் தேவதை அவள் கடந்து போகும் ஒற்றை வினாடிக்காக! | ![]() |
Subscribe to:
Posts (Atom)

















